காஸாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு 59 பேர் பலி
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து பெண் தூய்மைப் பணியாளா் தற்கொலை செய்துகொண்டாா்.
ராமாபுரம் பகுதியில் வசித்துவரும் அமுதா (34) என்பவா், அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா், பணி முடிந்து வீடு செல்வதற்குப் பதிலாக கிண்டி ரயில் நிலையம் வந்துள்ளாா். அப்போது, தில்லியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற திருக்குறள் விரைவு ரயில் கிண்டி ரயில் நிலையம் அருகே வந்த போது, 4-ஆவது நடைமேடையில் நின்றிருந்த அமுதா திடீரென ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து தகவல் அறிந்த மாம்பலம் ரயில்வே போலீஸாா் பெண்ணின் உடலை கைப்பற்றி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதில், அமுதா தனது மகனை கைப்பேசியில் தொடா்புகொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூறி உள்ளாா் என்பது தெரியவந்தது.