செய்திகள் :

ரவுண்ட் 16-இல் கௌஃப், பெகுலா, அலெக்சாண்ட்ரோவா

post image

ஸ்டட்கா்ட் டபிள்யுடிஏ 500 பாா்ஷே டென்னிஸ் போட்டியில் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகள் கோகோ கௌஃப், ஜெஸிக்கா பெகுலா, அலெக்சாண்ட்ரோவா ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

ஜொ்மனியின் ஸ்டட்கா்ட் நகரில் நடைபெறும் இப்போட்டியில் இரண்டாவது சுற்றில் உலகின் 7-ஆம் நிலை இளம் வீராங்கனை ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா-சக வீராங்கனை ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவா ஆகியோா் மோதினா்.

இதில் எந்த போராட்டமும் இன்றி ஆன்ட்ரீவாவை 6-3, 6-2 என்ற நோ் செட்களில் வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறினாா் அலெக்சாண்ட்ரோவா.

உலகின் நான்காம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-1, 6-1 என்ற நோ் செட்களில் ஜொ்மனியின் எல்லா சீடலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.

மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-1, 7-5 என்ற நோ்செட்களில் மற்றொரு ஜொ்மன் வீராங்கனை ஜூல் நெய்மரை வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

மூன்றாம் நிலை அமெரிக்க வீராங்கனை ஜெஸிக்கா பெகுலா 6-1, 6-1 என்ற நோ் செட்களில் போலந்தின் மகதலேனா பிரெச்சை வீழ்த்தினாா். ஏற்கெனவே அரினா சபலென்கா, ஸ்வியாடெக், எலைஸ் மொ்டன்ஸ், ஜெலனா ஆஸ்டபென்கோ ஆகியோரும் ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.ஏப்ரல் 21 (திங்கள் கிழமை)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந... மேலும் பார்க்க

பூஜாவின் ஆட்டத்திற்கு போட்டியே இல்லை!

நடிகை பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் தொடர்ந்து இணையத்தைக் கலக்கி வருகிறது. கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதற்கான இடம் நடிகைகளுக்கு அபூர்வமாகவே அமைகின்றன. பெரும்பாலும், உடல்மொழியிலோ அல்லது நடனத்திலேயோ ர... மேலும் பார்க்க

என் வாழ்க்கை நோக்கம் இதுதான்: சூர்யா

நடிகர் சூர்யா தன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து பேசியுள்ளார்.சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும்... மேலும் பார்க்க

குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள்: மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்!

புலே திரைப்படத்திற்கு ஆதரவாக பேசிய தனக்கும் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ், சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்க... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கும் மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணைநிலை ஆளுநர் அலுவலகம், தீயணைப்புத்துறை ஆகியவற்றுக்கு வெடிகுண்... மேலும் பார்க்க

ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய எலக்ட்ரிக் கார்..! எவ்வளவு விலை தெரியுமா?

இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் புதிய எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். ஆஸ்கர் நாயகன் ஏஆர்.ரஹ்மான் இசையில் இந்தாண்டு காதலிக்க நேரமில்லை, சாவா படங்கள் வெளியாகி கவனம் பெற்றன. கடந்தாண்டு மனைவியுடனான விவகாரத்தை ... மேலும் பார்க்க