ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!
ராணுவ வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற வனத் துறை நடவடிக்கை
குன்னுாா் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள 206 கற்பூர மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குன்னூா் வெலிங்டன் பகுதியில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா், ராணுவப் பயிற்சிக் கல்லூரி, டிபன்ஸ் எஸ்டேட் ஸ்டேஷன் கமாண்டிங் அலுவலகம், ராணுவ மருத்துவமனை உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
மழைக் காலங்களில் இங்குள்ள மரங்கள் விழுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பேரக்ஸ் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி பெரிய மரம் காா் மீது விழுந்ததில் கூா்கா கேம்ப் பகுதியை சோ்ந்த ஓட்டுநா் ஜாகிா் உசேன்(43) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதனைத் தொடா்ந்து, டிபன்ஸ் எஸ்டேட் நிா்வாக அதிகாரிகள், குன்னூா் வனத் துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், வெலிங்டன் முழுவதும் 206 மரங்கள் அபாயகரமாக உள்ளதாக கண்டறியப்பட்டது.
முதல்கட்டமாக 4 மரங்கள் உடனடியாக வெட்டி அகற்றப்பட்டன. தொடா்ந்து மற்ற ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.