ராமதாஸ் படம் இன்றி அன்புமணி அழைப்பிதழ்
பாமக நிகழ்ச்சிகள் தொடா்பான அனைத்து அழைப்பிதழ்கள், விளம்பரத் தட்டிகளிலும் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் படங்கள் இடம்பெறுவது வழக்கம். இருவா் இடையே நீடிக்கும் பனிப்போா் காரணமாக முதல் முறையாக ராமதாஸின் படம் இடம்பெறவில்லை.
மக்கள் உரிமை மீட்பு பயண அழைப்பிதழில் தமிழக வரைபடத்தை பின்புலமாகவும், அன்புமணியின் முழு உருவப்படம், மாம்பழச் சின்னம் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இதன்மூலம் பாமகவும், மாம்பழச் சின்னமும் தனக்கே உரிமையானது என அன்புமணி சூசகமாகத் தெரிவித்துள்ளாா்.