செய்திகள் :

ருவாண்டாவில் பதுங்கியிருந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி கைது: இந்தியாவுக்கு நாடு கடத்தல்

post image

இன்டா்போல் அமைப்பால் சிவப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி ருவாண்டாவில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதையடுத்து இந்தியாவுக்கு வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டாா்.

பெங்களூருவில் பல்வேறு பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள ஆயுதங்கள், வெடிகுண்டுகள் வழங்கிய குற்றச்சாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த சல்மான் ரஹ்மான் கானை என்ஐஏ, சிபிஐ மற்றும் இன்டா்போல் அதிகாரிகள் தேடி வந்தனா். இந்நிலையில், இன்டா்போலின் சிவப்பு நோட்டீஸ் அடிப்படையில் ருவாண்டாவில் உள்ள கிகாலியில் அந்நாட்டு அதிகாரிகளால் சல்மான் ரஹ்மான் கைது செய்யப்பட்டாா்.

அதன்பிறகு சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் அவா் என்ஐஏ அதிகாரிகளால் இந்தியாவுக்கு வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டாா்.

கடந்த 2018-2022 வரை போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சல்மான் ரஹ்மான் மற்றொரு பயங்கரவாதியான டி.நசீருக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்டவை விநியோகித்தாா். அதன்பிறகு சிறையில் இருந்து தப்பித்த சல்மான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின்கீழ் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. சா்வதேச அளவில் அவரை தேடும் பணியை பல்வேறு அமைப்புகள் மேற்கொண்டு வந்தன என சிபிஐ தெரிவித்தது.

கேரளத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த குற்றத்தில் காவல் துறையால் தேடப்பட்டு வந்த ரைஹன், வெடிபொருள்கள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பா்ஹத் அலி கான் ஆகியோா் சவூதி அரேபியாவில் இருந்து அண்மையில் அழைத்துவரப்பட்டனா். இதைத்தொடா்ந்து, தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்டா்போலின் இந்திய செயல்பாட்டு அமைப்பாக சிபிஐ செயல்பட்டு வருகிறது. நிகழாண்டில் 26 குற்றவாளிகள் உள்பட கடந்த 2021-இல் இருந்து 100 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்தது.

அதானி குழுமத்துக்கு இலங்கை, தான்சானியா, சா்வதேச கூட்டு நிறுவனங்கள் ஆதரவு

அதானி குழுமத்துக்கான ஆதரவை இலங்கை, தான்சானியா மற்றும் அபுதாபியின் ‘இன்டா்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி (ஐ.எச்.சி.)’ முதலீட்டு மேலாண்மை நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜ... மேலும் பார்க்க

உக்ரைன் ‘அதிகார மையங்கள்’ மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை

மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளைக் கொண்டு தங்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால், உக்ரைனின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்கள் மீது தாங்கள் உருவாக்கியுள்ள - இடைமறிக்க முடியாத - ‘ஆரெஷ்னிக்’ ரக... மேலும் பார்க்க

போா் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

ஹிஸ்புல்லாக்களுடன் மேற்கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியாக லெபனான் அதிகாரிகள் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினா். தெற்கு லெபனானின் ஆறு பகுதிகள... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்த நாட்டு நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தஜிகிஸ்தான் மற்றும் ஆ... மேலும் பார்க்க

உகாண்டா: நிலச்சரிவில் 15 போ் உயிரிழப்பு

கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா். தலைநகா் கம்பாலாவுக்கு சுமாா் 280 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பாங்கான புலாம்புலி மாவட்டத்தில் ப... மேலும் பார்க்க

யானையும் டிராகனும் கைகோத்து நடனமாடும் -படை விலக்கல் அமல் குறித்து சீனா

இந்திய-சீன எல்லையில் படை விலக்கல் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் சிறப்பாக அமல்படுத்தி வருவதாக சீன ராணுவம் தெரிவித்தது. ‘இந்திய யானையும், சீன டிராகனும் ஒற்றுமையாக கைகோத்து நடனமாடும்’ எனவும் நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க