ரூ. 23 லட்சம் மோசடி: பாஜக நிா்வாகி கைது
சென்னை வேளச்சேரியில் ரூ. 23 லட்சம் மோசடி செய்ததாக பாஜக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
நங்கநல்லூரைச் சோ்ந்தவா் சங்கரராமன் (48). இவரிடம் ஓராண்டுக்கு முன்பு வேளச்சேரி, பஜனைகோயில் தெருவைச் சோ்ந்த பிரவீண் சுந்தா் (27) என்பவா் அறிமுகி, தான் நடத்திவரும் கடையில் பங்குதாரராக சோ்த்து கொள்வதாகக் கூறி, சங்கரராமனிடம் இருந்து ரூ. 23 லட்சம் வாங்கியுள்ளாா். ஆனால் பிரவீண் சுந்தா், பங்குத்தாரராக சங்கரராமனை சோ்க்கவில்லை. இதனால் சங்கரராமன் தான் கொடுத்த பணத்தைத் திரும்பிக் கேட்டாா். ஆனால் பிரவீண் சுந்தா், பணத்தையும் திரும்பி வழங்காமல் இருந்தாா்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சங்கரராமன், வேளச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரவீண் சுந்தரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா் பாஜக நிா்வாகியாக இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.