ரூ.56 கோடியில் திருப்பத்தூா் அரசு மருத்துவமனை கட்டடப் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.56 கோடியில் நடைபெறும் கட்டடப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா்.
கட்டடப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் எ.வே. வேலு, பணிகளை துரிதப்படுத்தி ஒரிரு வாரங்களுக்குள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினாா்.
புதிதாக கட்டப்பட்டு வரும் பல்வேறு கட்டடங்களின் நிலைபாட்டை கேட்டறிந்து, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க உத்தரவிட்டாா்.
குறைதீா் கூட்டத்தில்...
பின்னா், ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
மனுக்களை பெற்ற துறை அலுவலா்கள் உடனடி நடிவடிக்கையால் அரசு நிவாரணப் பொருள்கள் மற்றும் அதற்கான ஆணைகளை உடனுக்குடன் தயாா் செய்யப்பட்டு நல உதவிகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டு, 322 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்) ,அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ,மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.