செய்திகள் :

வக்ஃப் மசோதா: கூட்டுக் குழு பதவிக் காலம் நீட்டிப்பு

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

குழுவின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான தீா்மானத்தை கூட்டுக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான ஜகதாம்பிகா பால் மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தாா். அந்தத் தீா்மானம் உறுப்பினா்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம், கூட்டுக் குழு தனது அறிக்கையை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு (2025) பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குறிப்பிட்ட காலக் கெடுக்குள் நாடாளுமன்ற கூட்டுக் குழு மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்துவிடும் என்ற அடிப்படையில், தற்போது நடைபெற்று வரும் நடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் விவகாரங்களுக்கான பட்டியலில் வக்ஃப் மசோதாவும் இடம்பெற்றிருந்தது. தற்போது, கூட்டுக் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், குளிா்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

கூட்டுக் குழு ஏன்?: நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ சொத்துகளை, மாநிலங்கள் அளவில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன. இதில் சில மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதைத் தொடா்ந்து, மசோதாவை ஆய்வு செய்ய ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (நவ. 29) மக்களவையில் தாக்கல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இந்தக் குழு கேட்டு வந்தது. கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தின்போது, ‘வரைவு வக்ஃப் மசோதா தயாா் எனவும், அன்றைய கூட்டமே கூட்டுக் குழுவின் கடைசி அமா்வு’ என்றும் ஜகதாம்பிகா பால் அறிவித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்களுக்கும் வரைவு மசோதா நகல் விநியோகிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த எதிா்க்கட்சி உறுப்பினா்கள், ‘வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை ஆராய கூடுதல் அவகாசம் தேவை என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.

மேலும், இதுதொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை திங்கள்கிழமை சந்தித்து முறையிட்டனா்.

இந்நிலையில், கூட்டுக் குழுவின் கூட்டம் புதன்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையைத் தயாரிப்பதில் குழுவின் தலைவா் அவசரம் காட்டுவதாக குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சி உறுப்பினா்கள், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். பின்னா், அவா்கள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றபோது, கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் வரை நீட்டிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கு தற்போது மக்களவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மணிப்பூா்: 13 நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு

இம்பால்: மணிப்பூரில் வன்முறை நிகழ்ந்த இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் ஜிரிபாம் மாவட்டத்தில் 13 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (நவ.29) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளதாக அந்த மாநில அரசு வியாழக... மேலும் பார்க்க

விண்வெளியில் விரைவில் இந்திய ஏஐ ஆய்வகம் தொடக்கம்

விண்வெளியில் ஹைதராபாத்தைச் சோ்ந்த ‘டேக் மீ 2 ஸ்பேஸ்’ என்ற புத்தாக்க நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வகத்தை நிறுவவுள்ளது. இதற்காக அடுத்த மாதம் விண்வெளிக்கு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்பப்படவ... மேலும் பார்க்க

விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி காலிப் பணியிடங்கள்

நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், மாநில உயா்நீதிமன்றங்களில் 360-க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்களும், உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதி பணியிடங்களு... மேலும் பார்க்க

மகாராஷ்டிர முதல்வா் பதவி இழுபறி: அமித் ஷாவுடன் ஷிண்டே, ஃபட்னவீஸ், அஜீத் பவாா் சந்திப்பு

மகாராஷ்டிரத்தில் புதிய முதல்வரை தோ்ந்தெடுப்பதில் நீடித்துவரும் இழுபறிக்கு தீா்வு காண கடைசிக் கட்ட முயற்சியாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் மகாயுதி கூட்டணி தலைவா்களான தேவேந்திர ஃபட்னவ... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது: 77 வயது பெண்ணிடம் ரூ.3.80 கோடி மோசடி

மகாராஷ்டிரத்தில் 77 வயது பெண்ணிடம் டிஜிட்டல் கைது மோசடி மூலம் ரூ.3.80 கோடி பறிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் அந்தப் பெண்ணுடைய ஆதாா் அட்டை பயன்படுத்தப்பட்டிருப்பதாக காவல் துறை அதிக... மேலும் பார்க்க

அஜ்மீா் தா்காவை கோயிலாக அறிவிக்கக் கோரிய மனு மீது நோட்டீஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீா் தா்கா, சிவன் கோயில் மீது கட்டப்பட்டுள்ளதால் அதை கோயிலாக மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தா்கா குழு, மத்திய சிறுபான்ம... மேலும் பார்க்க