செய்திகள் :

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைகிறது

post image

வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஒடிஸô கடலோரப் பகுதிகளையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவானது. இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயல் சின்னம் காரணமாக, அரபிக் கடல் காற்று இழுக்கப்படுவதால், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் நாள்களில் தென்மேற்குப் பருமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை எச்சரிக்கை: தென்னிந்திய கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதன்கிழமை (மே 28) முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மே 28-இல் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், மே 29, 30 தேதிகளில் கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

260 மி.மீ. மழை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 260 மி.மீ. மழை பதிவானது. மேலும், எமரால்டு (நீலகிரி) - 130 மி.மீ., மேல் பவானி (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோவை) - தலா 120 மி.மீ., குந்தா பாலம் (நீலகிரி), தேக்கடி (தேனி) - 110 மி.மீ., பெரியாறு (தேனி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) - தலா 100 மி.மீ. மழை பதிவானது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  மே 28 முதல் மே 30 வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை: சென்னையில் அம்பத்தூர், ஈக்காடு தாங்கல், வடபழனி, கிண்டி, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

புதன்கிழமை (மே 28) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர்: ஒரே கருவியை பயன்படுத்திய பல் மருத்துவமனை! 8 பேர் பலி

திருப்பத்தூரில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டில் தனியால் பல் சிகிச்சை மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

7வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு!

ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடர் ஆலோசனை! அன்புமணியின் அடுத்த நகர்வு என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்த நிலையில், அன்புமணி கட்சி நிர்வாகிகள் உடன் 3 நாள்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளார்.ப... மேலும் பார்க்க

கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுத... மேலும் பார்க்க

கமல்ஹாசன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை: அப்பாவு

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தி... மேலும் பார்க்க

முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்!

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 29) ... மேலும் பார்க்க