வடகிழக்குப் பருவமழை 33 % அதிகம்!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு இயல்பை விட 33 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
அக்டோபர் 1-ல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, இந்தாண்டு பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இதுவரை வடகிழக்குப் பருவமழை 1077.6 மி.மீ பதிவாகியதுள்ளது. இயல்பாக 809.6 மி.மீட்டர் பதிவாகும் ஆனால் இந்தாண்டு இயல்பைவிட 33 சதவீதம் மழை அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (தனுசு)
இதனிடையே இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி பருவமழை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மழை நீடித்து வருகின்றது.
தென் இந்தியப் பகுதிகளில் ஜன.15-ல் வடகிழக்குப் பருவமழை நிறைவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.