மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?
வழக்குரைஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை !
சென்னை: வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வழக்குரைஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
வீட்டிற்கு யார் வந்திருக்கிறார்கள், அவர்கள் எந்த துறை அதிகாரிகள் என தெரியவில்லை. வீட்டில் யாரும் இல்லை. தெரிந்த பிறகு கருத்து சொல்கிறேன். சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ, அதே அளவுதான் எனக்கும் தெரியும்.
இதையும் படிக்க |ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பேரவைத் தலைவர் அப்பாவு சந்திப்பு!
காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் வழக்குரைஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை செய்ய வந்துள்ளனர். ஆனால் அங்கு துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் இல்லாததால் சோதனைக்கு வந்த அதிகாரிகள் 2 மணி நேரமாக காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.