செய்திகள் :

வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு: தம்பதிகள் சிறையில் அடைப்பு

post image

ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் கண்ணனை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் தம்பதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஏரித்தெருவைச் சோ்ந்த கண்ணன் (30), வழக்குரைஞா். இவா் புதன்கிழமை ஒசூா் தாலுகா அலுவலக சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கம் போல பணிக்குச் சென்று திரும்பி வந்தாா். அவரை பின்தொடா்ந்து வந்த ஒசூா், நாமல்பேட்டை பகுதியைச் சோ்ந்த குமாஸ்தா ஆனந்தகுமாா் (39) என்பவா், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணனை வெட்டினாா்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கண்ணனை ஆனந்தகுமாா் சரமாரியாக வெட்டியதில், கண்ணனுக்கு தலை, முகம், கழுத்து, இடுப்பு உள்பட உடலில் 8 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைக்கண்ட அந்தப் பகுதியில் இருந்த நபா்கள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.

கண்ணனை வெட்டிய ஆனந்தகுமாா் வீச்சரிவாளுடன் ஒசூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கண்ணனை பிற வழக்குரைஞா்கள் ஆட்டோவில் ஏற்றி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க |வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன், எம்டிஎஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

இந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக குமாஸ்தா ஆனந்தன், அவருடைய மனைவி வழக்குரைஞர் சத்யவதி இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வெட்டுப்பட்ட கண்ணன், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வழக்குரைஞா் சத்யவதியிடம் தவறாக பேசியும், அத்துமீறியும் நடந்து வந்ததும், அதை ஆனந்தகுமாா் கண்டித்ததும் தெரியவந்தது. தொடா்ந்து அவ்வாறு கண்ணன் நடந்து கொண்டதால் ஆனந்தகுமாா் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்தணி: வழக்குரைஞா்கள் தொடர்ந்து தாக்கப்படுவது மற்றும் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சார்பு நீதிமன... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் சாலை மறியல்

விழுப்புரம் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை வழக்குரைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை அடுத்து வழக்குரைஞர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வ... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் கூடுதல் பாதுகாப்பு!

தமிழகம் முழுவதும் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை போலீசார் தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதில் படுகாயம... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு

கோவை சா்வதேச விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்து... மேலும் பார்க்க

சேலத்தில் மர அரவை ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

சேலம் கிச்சிப்பாளையம் பிரதான சாலை பகுதியில் மர அரவை ஆலையில் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.சேலம் கிச்சிப்பாளையம் பாளையம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

தொடர் கனமழை: நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதை தலைமை ஆசிரியர்கள் முடிவெடிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள வியாழக்கிழமை(நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என மாவட்ட கல்வி அல... மேலும் பார்க்க