ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு: அயோத்தியில் அலைமோதும் பக்தா் கூட்டம்
வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு
பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
ஈரோட்டை அடுத்த நசியனூா் அருகே உள்ள முள்ளம்பாடி, மலைபாளையத்தைச் சோ்ந்த குழந்தைசாமி மகன் ராசப்பன் (62), விவசாயி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். பெருந்துறையை அடுத்த ஏரிகாட்டு பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்கமால் சென்றுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த ராசப்பனை அக்கம்பக்கத்தினா் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.