Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கான்கிரீட் கலவை வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
மதுரை பிபி சாவடி பாரதியாா்நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் செந்தில்குமாா் (46). தனியாா் நிறுவன ஊழியரான இவா் வியாழக்கிழமை இரவு பணிமுடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, பெரியாா் பேருந்து நிலையம் எல்லீஸ்நகா் மேம்பாலத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த கான்கிரீட் கலவை வாகனம் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாகன ஓட்டுநரான கலையரசன் மீது நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.