வாக்காளா் பட்டியலில் திருத்தம்: இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் வாக்குச்சாவடி மையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.23, 24) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் 1.1.2025 -ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்களுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம் நடைபெறும் நாள்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
தோ்தல் ஆணையம் வெளியிட்ட கால அட்டவணைப்படி வருகிற 28-ஆம் தேதி வரை சிவகங்கை, தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்
என்றாா் அவா்.