வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 15 - மார்ச் 20) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தொழிலை சீராகவே நடத்துவீர்கள். மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. பயணங்களை மேற்கொள்வீர்கள். கடினமான நேரத்தில் அனுபவ அறிவு உதவும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகளுக்கு தனவரவு மேம்படும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு வருவாய் அதிகரிக்கும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - மார்ச் 20.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். பழைய பிரச்னைகள் தீரும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வருமானம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களை நம்பி மேலதிகாரிகள் முக்கிய பணிகளை அளிப்பார்கள். வியாபாரிகளுக்கு கடன் பிரச்னைகள் குறையும். விவசாயிகள் இழுபறியான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்குப் புதிய அனுபவம் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
உடனிருப்போருக்கு உதவுவீர்கள். வழக்குகளில் உரிமைகள் கிடைக்கும். சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். அரசு அலுவலர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்னைகள் குறையும். வியாபாரிகள் சுமுக நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் விவசாயப் பொருள்களுக்குச் செலவழிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் கடுமையாக உழைப்பீர்கள். கலைத் துறையினருக்கு வருவாய் கூடும். பெண்கள் குடும்பத்தில் மருத்துவச் செலவுகளைக் காண்பீர்கள். மாணவர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
வாகன வசதிகள் உண்டாகும். புதிய அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியமும், மன வளமும் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணவாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் விளைச்சலை மேம்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்துடன் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்குப் பயணங்கள் மகிழ்ச்சியை அளிக்கும். பெண்கள் பெரியோரின் ஆசியைப் பெறுவீர்கள். மாணவர்கள் வெளிநாட்டில் மேற்
படிப்பைப் படிக்க முயற்சிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
ரகசியங்களைக் காப்பீர்கள். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். வருமானம் கூடும்.
உத்தியோகஸ்தர்கள் கடுமையான பணிகளை முடிப்பீர்கள். வியாபாரிகள் கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினர் போதிய வருமானம் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் பாடம் நடத்தி, தேர்வுக்குத் தயாராகுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மாற்றி யோசித்து சிந்தனையைச் செயல்படுத்துவீர்கள். சமூகத்தில் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். யோகா கற்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பேச்சுகளைக் குறைக்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் } வாங்கலில் லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் திறமைகளைக் கூட்டிக் கொள்வீர்கள். பெண்கள் உறவினர்களிடம் கவனத்துடன் இருக்கவும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் தனித்தன்மையை நிரூபித்து உயர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகிவிடும். உடனிருப்போரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும்படி நடப்பீர்கள். வியாபாரிகள் கடன்களை வசூலிப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் மேம்படும்.
அரசியல்வாதிகள் சமுதாயத்தில் புகழடைவீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களின் ஆதரவு பெருகும். பெண்களுக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
உறவினர்கள் பகைமை மறந்து நேசம் பாராட்டுவார்கள். கடன்கள் வசூலாகும். சமூகத் தொண்டுகளால் புகழும், கௌரவமும் உயரும். குழந்தைகளின் புத்திசாலித்தனம் கூடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் தடையின்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டு. விவசாயிகள் குத்தகை பாக்கிகளைச் செலுத்து விடுவீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய இலக்குகளை அடைவீர்கள். கலைத் துறையினருக்கு ஆதரவு பெருகும். பெண்கள் ஆன்மிக விஷயங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
வருமானம் சிறப்பாக இருக்கும். திருடு போன பொருள்கள் கிடைக்கும். முக்கிய விஷயங்களில் கவனம் தேவை.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனமாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். விவசாயிகள் புதிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காதீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்வீர்கள். பெண்கள் பொறுமையுடன் நடப்பீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
செயல்கள் தொய்வில்லாமல் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைவந்து சேரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்களின் ஆதரவும், உதவியும் நன்றாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகள் நண்பர்களை ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் திடீர் பயணம் செய்ய நேரிடும். கலைத் துறையினர் சிரத்தையுடன் திறமைகளை வெளிப்படுத்த வேண்டாம். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்கள் கவனமாகப் பேசவும்.
சந்திராஷ்டமம் - மார்ச் 14.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு பணவரவு உண்டு. விவசாயிகள் பிறருக்கு உதவுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மனக்கசப்புகள் அகலும். கலைத் துறையினர் புகழும், கௌரமும் உயரக் காண்பீர்கள். பெண்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால் படிப்பில் முன்னேறலாம்.
சந்திராஷ்டமம்} மார்ச் 15, 16.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
கடினமான வேலைகளைச் செய்துமுடிப்பீர்கள். நண்பர்களின் பாராமுகத்தைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் பொறுமையைக் கையாள்வீர்கள். வியாபாரிகளுக்கு நன்மைகள் வந்து சேரும். விவசாயிகளுக்கு நிலுவைத் தொகைகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் நல்ல அனுபவம் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். மாணவர்கள் கவனத்துடன் இருக்கவும்.
சந்திராஷ்டமம் - மார்ச் 17, 18, 19.