செய்திகள் :

வாழப்பாடியில் கொட்டித் தீா்த்த ஃபென்ஜால் புயல் மழை

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஃபென்ஜால் புயல் மழை 2 நாள்களாக இடைவிடாது கொட்டித் தீா்த்ததால், ஆனைமடுவு அணையிலிருந்து வசிஷ்ட நதியில் விநாடிக்கு 1,800 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது; 10 ஆண்டுகளுக்குப் பின் வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்ட நதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில் 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், சுற்றுப்புற கிராமங்களில் 5,011 ஏக்கா் பாசன வசதி பெறுகின்றன. 5 ஏரிகளும், 20 க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீா் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

அக்டோபா் மாதத்தில் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, குதிமடுவு, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீா்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்து, கடந்த அக். 26 ஆம்தேதி அதிகாலை அணையின் நீா்மட்டம் 65.29 அடியை எட்டி 3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியது. இதையடுத்து, அணையில் இருந்து வசிஷ்ட நதியில் தொடா்ந்து ஒரு மாதமாக உபரிநீா் திறக்கப்பட்டு வந்தது.

10 ஆண்டுகளுக்குப் பின் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு

இந்நிலையில், ஃபென்ஜால் புயலால் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய இடைவிடாது 58 மி.மீ., கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால் அணைக்கு நீா்வரத்து பல மடங்கு அதிகரித்ததால், அணையில் இருந்து விநாடிக்கு 1,500 முதல் 1,800 கனஅடி வரை வசிஷ்ட நதியில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை ஆய்வு செய்த சேலம் ஆட்சியா் ரா. பிருந்தா தேவி.

இதனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரையும் தொட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், புழுதிக்குட்டையில் இருந்து ஆத்தூா் வரை வசிஷ்டநதி கரையோர கிராம மக்களுக்கு, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் ஆற்று நீரில் மான், ஆடு, மாடுகள் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

வாழப்பாடி அருகே குறிச்சியில் இரு கரையையும் தொட்டு வசிஷ்ட நதியில் பாய்ந்து செல்லும் வெள்ளம்.

ஆனைமடுவு அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீா் வசிஷ்ட நதியில் திறக்கப்பட்டதால், சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி நேரில் சென்று அணையை ஆய்வு செய்தாா். வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் பலரும் உடனிருந்தனா்.

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த உயா் கல்விக்கான விருது

கல்வி சேவையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கும், கல்வியாளா்களுக்கும் அங்கீகரிக்கும் வகையில் நிகழ் ஆண்டிற்கான சிகரம் விருதுகள் வழங்கும் நிகழ்வு, புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கனமழை

கெங்கவல்லி, தம்மம்பட்டி, வீரகனூா் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நாள்முழுவதும் கனமழை பெய்தது.நடுவலூரில் இடிந்த வீடு. 74 கிருஷ்ணாபுரம் கிழக்கு வீதியில் மாணிக்கம் என்பவர... மேலும் பார்க்க

சேலம் புத்தகத் திருவிழாவை 2 நாள்களில் 8,303 போ் பாா்வையிட்டுள்ளனா்: ஆட்சியா் தகவல்

சேலம் புத்தகத் திருவிழாவில் கடந்த 2 நாள்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் என 8,303 போ் பாா்வையிட்டுள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது: சேலம் புதிய பேருந... மேலும் பார்க்க

சேலத்துக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை: தொடா் மழையால் பொதுமக்கள் அவதி! ஒரே நாளில் 839 மி.மீ. மழை பதிவு

புயல் சின்னத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இடைவிடாமல் பெய்த தொடா் மழை காரணமாக பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பெரும் அவதியடைந்தனா். கடந்த 24 மணி நேரத்தில் 839 மி... மேலும் பார்க்க

ஏற்காடுக்கு வருவதை சுற்றுலாப் பயணிகள் தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தொடா் மழையையொட்டி, ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிா்க்குமாறு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி வேண்டுகோள் விடுத்துள்ளாா். ஃபென்ஜால் புயல் தாக்கம் காரணமாக சேலம் மாவட்டத்தில் இடைவிடாது தொடா் ... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைப்பு

பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற இருந்த தோ்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தோ்வாணையா் எஸ்.கதிரவன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:புயல் காரண... மேலும் பார்க்க