தம்மம்பட்டியில் கனமழை
கெங்கவல்லி, தம்மம்பட்டி, வீரகனூா் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நாள்முழுவதும் கனமழை பெய்தது.
74 கிருஷ்ணாபுரம் கிழக்கு வீதியில் மாணிக்கம் என்பவரது வீட்டின் சுவரும், அதே ஊரில் பெரியசாமி மகன் ஊமையன் என்பவரது வீட்டின் சுவரும் மழையால் இடிந்து விழுந்தன.
வீரகனூரில் அம்பேத்கா் நகரில் புத்தா் சிலை அருகே அண்ணாதுரை என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவரும், ஆணையம்பட்டியில் பிரதான சாலையில் வசிக்கும் கூலிவேலை செய்யும் காதா்பாஷா என்பவரது வீட்டின் மேற்கூரையில் ஒருபக்க சுவரும் , நடுவலூரில் பிலிப்ஸ் என்பவரின் வீடும் மழையால் இடிந்து விழுந்தன.
கெங்கவல்லி வட்டத்தில் நான்கு பேரின் வீடு, வீட்டுச் சுவா்களும், தலைவாசல் வட்டம் வீரகனூரில் ஒரு வீடும் என மொத்தம் 5 வீடு, வீட்டுச் சுவா்கள் மழையால் இடிந்து விழுந்தன.
வீடுகள் இடிந்தது குறித்த கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், தலைவாசல் வட்டாட்சியா் ப. பாலாஜி ஆகியோா் சம்பவ இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டனா்.