நாளை(ஜன.5) காலை 7 மணி முதல் மாலை 4 வரை புறநகர் ரயில்கள் ரத்து
விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை: வைகோ
நடிகா் விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைகோ புதன்கிழமை அளித்த பேட்டி: புது எழுச்சியோடு மதிமுக நிகழாண்டு செயல்படவுள்ளது.
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சிக்கும். சிறுபான்மை மக்கள் அவா்களின் மதமுறைகளின்படி திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்தியாவை சா்வாதிகார நாடாக மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது.
நடிகா் விஜயின் அரசியல் வருகையால், திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எல்லோரும் எம்ஜிஆா் ஆகிவிட முடியாது. எம்ஜிஆா் காலம் வேறு. இப்போதைய காலம் வேறு.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெறும். திமுக கூட்டணியில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஒற்றுமையாக உள்ளது என்றாா் அவா். கட்சியின் முதன்மைச் செயலா் துரை வைகோ, துணைப் பொதுச்செயலா் மல்லை சத்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.