விடுமுறையில் வந்த ராணுவ வீரா் மரணம்: போலீஸாா் விசாரணை
வாணியம்பாடி அருகே விடுமுறையில் வந்த மத்திய பாதுகாப்பு படை வீரா் திடீா் மரணம் தொடா்பாக காவலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த உமையப்ப நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (39). இவா், மத்திய பாதுகாப்பு படை வீரா். கடந்த 7-ஆம் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்தவா், வெள்ளிக்கிழமை வீட்டில் திடீரென உயிரிழந்தாா். அவா் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவா்களுக்கும் தெரிய வந்தது. அவா்கள் தகவலளித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து காவலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.
மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா் இறந்துவிட்டாா், புகாா் எதுவும் வேண்டாம் என்று குடும்பத்தினா் கூறியுள்ளனா்.
இருப்பினும், போலீஸாா் அவரது குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறி, உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக காவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.