விடைபெற்றது 2024! நியூ ஸிலாந்தில் புத்தாண்டு பிறந்தது
உலகிலேயே முதல் நாடாக நியூ ஸிலாந்தில், 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு பிறந்தது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும்.
2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி வருகிறது. பலரும் அவரவருக்கு உரிய முறையில் புத்தாண்டை வரவேற்கத் தயாராவார்கள்.