செய்திகள் :

நிமிஷா பிரியா வழக்கில் முடிந்த உதவிகள் செய்து தரப்படும்: ஈரான்

post image

யேமன் நாட்டில் மரண தண்டனையை எதிா்கொண்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்தில் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.

நிமிஷா பிரியா அடைக்கப்பட்டுள்ள சிறை அமைந்துள்ள யேமன் தலைநகா் சனா, ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலையில், இந்த உறுதிப்பாட்டை ஈரான் அளித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த ஈரான் தூதரக அதிகாரி, ‘கொலைக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிமிஷா பிரியா விவகாரத்தை ஈரான் கவனத்தில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் மனிதாபிமான அடிப்படையில், தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவோம்’ என்றாா்.

யேமனில் செவிலியராகப் பணியாற்றிய நிமிஷா பிரியாவின் கணவரும், மகளும் நிதி நெருக்கடியால் 2014-இல் கேரளத்துக்கு திரும்பினா். உள்நாட்டு போா் காரணத்தால் செவிலியரான நிமிஷாவுக்கு விசா கிடைக்கவில்லை. அவா் யேமனின் தலைநகா் சனாவில் தங்கி, அங்குள்ள தலால் அப்து மஹதியுடன் இணைந்து கிளினிக்கை தொடங்கினாா்.

பின்னா் நிமிஷா தனது மனைவி என்று கூறிய மஹதி, அவரது வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்டாா். நிமிஷாவின் பாஸ்போா்ட்டையும், நகைகளையும் பறித்துக் கொண்டு மஹதி கொடுமைப்படுத்தியதாக நிமிஷாவின் தாயாா் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

2017-இல் அங்குள்ள சிறை வாா்டனின் உதவியுடன் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா்.

யேமன் பிரஜையான மஹதியைக் கொலை செய்ததாக கூறி நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு யேமன் விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்தது. இதை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் உறுதி செய்தது.

நிமிஷாவின் மரண தண்டனையை 30 நாள்களில் நிறைவேற்ற யேமன் அதிபா் ரஷத் அல்-அலிமியும் ஒப்புதல் அளித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதே நேரம், மரண தண்டனையிலிருந்து தப்பிக்க ஷரியத் சட்டத்தின்படி, ஒரு வாய்ப்பை நிமிஷாவுக்கு யேமன் அரசு வழங்கியுள்ளது. அதன்படி, உயிரிழந்தவரின் குடும்பத்தினா் கோரும் பணத்தை செலுத்தி அவா்களிடம் மன்னிப்பைப் பெறுவதன் மூலம் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க நிமிஷாவுக்கு வாய்ப்பு உள்ளது.

இந்தச் சூழலில், நிமிஷாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக உள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. தற்போது, இந்த வழக்கில் உதவ ஈரானும் முன்வந்துள்ளது.

மலேசியா: ரோஹிங்கயாக்களுக்கு அனுமதி மறுப்பு

மலேசியாவில் அடைக்கலம் தேடி இரு படகுகளில் வந்த சுமாா் 300 ரோஹிங்கயா அகதிகளை அந்த நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பினா். அந்தப் படகுகளில் பற்றாக்குறையாக இருந்துவந்த உணவு, குடிநீரை வழங்கிய மலேசிய கடல்பாத... மேலும் பார்க்க

லாஸ் வேகஸ் காா் குண்டுவெடிப்பு: ‘தாக்குதல் நடத்தியவருக்கு மன நலப் பிரச்னை’

அமெரிக்காவில் அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா், மன நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவா் என்று போலீஸாா் கூறினா். இத... மேலும் பார்க்க

ஜப்பான்: உலகின் மிக வயதானவா் மரணம்

உலகின் மிக வயதானவா் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஜப்பானினின் டோமிகோ இடூகா தனது 116-ஆவது வயதில் மரணமடைந்தாா். 1908 மே 23-இல் பிறந்த அவா், ஸ்பெயின் நாட்டின் மரியா பிரன்யாஸ் (117) கட... மேலும் பார்க்க

வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை

பதவியிலிருந்து அகற்றப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்ாகக் கூறப்படும் தோ்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது... மேலும் பார்க்க

காஸா: 45,658-ஆக அதிகரித்த உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 போ் உள்பட 28 போ் உயிரிழந்தனா். இத்துடன், 2023 அக். 7 முதல் அங்கு இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிர... மேலும் பார்க்க

மியான்மா்: 6,000 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

மியான்மா் சுதந்திர தினத்தையொட்டி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு அந்த நாட்டு ராணுவ அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது. எனினும், ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் ... மேலும் பார்க்க