செய்திகள் :

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட்!

post image

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் 100 ஆவது பயண போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து புதன்கிழமை (ஜன.29) காலை 6.23 மணிக்கு விண்ணில் பாய்ந்து.

சமீபத்தில் பதவியேற்ற விண்வெளி நிறுவன தலைவர் வி. நாராயணனுக்கும் இந்தப் பணி முதல் பயணமாகும். இது இந்த ஆண்டு இஸ்ரோவின் முதல் முயற்சியாகும்.

இந்தியாவில் தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துக்கும், பாதுகாப்பு பயன்பாட்டுக்கும் உதவும் இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்) உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டது.

இதற்காக ஐஆா்என்எஸ்எஸ் வரிசையில் 2013 முதல் 2018-ஆம் ஆண்டு வரையான கால கட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இதன் மூலம் இந்தியாவுக்கென பிரத்யேக வழிகாட்டி நாவிக் தொழில்நுட்பம் செயல்பாட்டில் உள்ளது. நாட்டின் கண்காணிப்புப் பணிகள் அதன் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், ஐஆா்என்எஸ்எஸ் திட்டத்தில் தற்போதைய அவசியத்துக்கேற்ப மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது.

பெரும் செல்வமுள்ள கட்சி பாஜக: ரூ.7,113 கோடி கையிருப்பு

அதன்படி, இதற்கு முன்பு அனுப்பப்பட்ட ஐஆா்என்எஸ்எஸ் 1-ஜி செயற்கைக்கோளுக்கு மாற்றாக என்விஎஸ்-01 செயற்கைக் கோளை கடந்த 2023 மே 29-இல் விண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ.

தற்போது அதற்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ் 02 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏவுவதற்கான 30 மணி நேர கவுண்ட்டவுன் 27 ஆம் தேதியுடன் முடிந்ததும் எரிபொருள் நிரப்புதல் உள்பட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனா்.

இதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் 100 ஆவது பயணத்தின், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து புதன்கிழமை (ஜன.29) காலை 6.23 மணிக்கு விண்ணில் பாய்ந்து.

என்விஎஸ் செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டா்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.

இது பிற செயற்கைக்கோள்களுடன் இணைந்து செயற்கைக்கோள்களுக்கான சுற்றுப்பாதை நிர்ணயம், தரை, கடல் மேலாண்மை, மொபைல் சாதனங்களில் இருப்பிட அடிப்படையிலான சேவைகள், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடா் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யத்திலிருந்து நடிகை வினோதினி விலகல்!

நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான வினோதினி, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஜன.30) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவ... மேலும் பார்க்க

காந்தி சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி: மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி கடற்கரைசாலையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மகாத... மேலும் பார்க்க

ஒடிசாவில் மின்சாரம் தாக்கி யானை பலி!

ஒடிசாவின் சம்பால்பூர் மாவட்டத்தில் வயலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை உரசியதில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது.சம்பால்பூரின் சதார் வனப்பகுதிக்கு அருகிலுள்ள ஜடுலோய்சிங் கி... மேலும் பார்க்க

காந்தி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று(ஜன. 30) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசி... மேலும் பார்க்க

ஜம்முவில் பயங்கரவாதிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையை இன்று (ஜன.30) துவங்கியுள்ளனர்.ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாத... மேலும் பார்க்க

4 வங்கதேசப் பெண்கள் கைது! வீட்டு உரிமையாளருக்கு வலைவீச்சு!

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய 4 வங்கதேசத்து பெண்களை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரக... மேலும் பார்க்க