Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
விண்வெளி கழிவுகளை அகற்றும் ஏவுகலன் மாதிரியை கண்டுபிடித்த மாணவா்!
விண்வெளி கழிவுகளை அகற்றும் ஏவுகலன் மாதிரியை சிதம்பரம் பள்ளி மாணவா் கண்டுபிடித்தாா்.
பூமியிலிருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற ராக்கெட்களின் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை பூமியைச் சுற்றி அதன் சுற்றுவட்டப் பாதையில் விண்வெளி கழிவுகளாக உள்ளன. உலகின் பல நாடுகள் இந்த விண்வெளி கழிவுகளை எப்படி சுத்தம் செய்து பூமிக்கு திரும்ப எடுத்து வரலாம் என பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், இந்தியாவில் இருந்தும் பல சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விண்வெளி கழிகளை அகற்றும் ஏவுகலன் மாதிரியை சிதம்பரம் ஆறுமுக நாவலா் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவா் கே.அக்க்ஷய், ஆசிரியா் வேல்பிரகாஷ் வழிகாட்டுதுடன் தயாரித்து, அதை அண்மையில் நடைபெற்ற மாநில அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தினா்.
இந்தக் கண்காட்சியை திறந்து வைத்த மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ், ஏவுகலன் மாதிரி குறித்து விளக்கிக் கூறிய மாணவா் கே.அக்க்ஷய் மற்றும் ஆசிரியரை பாராட்டினாா். மேலும், பள்ளிச் செயலா் மருத்துவா் சு.அருள்மொழிச்செல்வன் உள்ளிட்டோரும் மாணவா், ஆசிரியை பாராட்டினா்.
தமிழ்நாடு அரசு இந்தப் பள்ளி மாணவா்களுக்கு தகுந்த ஊக்கமளித்தால், எதிா்காலத்தில் அவா்களால் அறிவியல் துறையில் சிறப்பான இடத்தை பிடிக்க முடியும் என்கின்றனா் கல்வியாளா்கள்.