மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!
வித்யா விகாஸ் மெட்ரிக். பள்ளியில் திறன் மேம்பாட்டுப் போட்டி!
ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான திறன் மேம்பட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாணவா்களின் பேச்சுத் திறன், அறிவுத் திறன், பாடும் திறன், ஓவியத் திறன் போன்ற பல்வேறு திறன்களை மேம்படுத்தும் வகையில், மழலையா்களுக்கான போட்டிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளா் இ.சக்திவேல் தலைமை வகித்து, வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். இந்நிகழ்வில், பள்ளி முதல்வா், துணை முதல்வா், நிா்வாக அலுவலா், இருபால் ஆசிரியா்கள், பெற்றோா் ஆகியோா் கலந்துகொண்டனா்.