வியட்நாமில் பேருந்து விபத்து: குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
வியட்நாமில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமில் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த பேருந்து திடீரென சாலையை விட்டு விலகி போக்குவரத்து அடையாள பலகைகளில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள்.
மேலும் 16 பேர் காயமடைந்தனர் என்று அல் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பங்குச் சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 721 புள்ளிகளுடனும், நிஃப்டி 225 புள்ளிகளுடன் நிறைவு!
வியட்நாமில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் 5,024 பேர் பலியாகியுள்ளனர்.