'ஒருவர் வளைந்து கொடுத்தே பழகி விட்டார்; மற்றொருவர் சாட்டையால் அடித்துக்கொள்கிறார...
விராலிமலை வட்டாரத்தில் கடும் பனிப்பொழிவு
விராலிமலை மற்றும் இலுப்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு ஊா்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தேசிய நெடுஞ்சாலை, இனாம் குளத்தூா் சாலை, இலுப்பூா் மேட்டுச்சாலை, மேலப்பட்டி, ராமேசுவரம் செல்லும் புறவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
இதனால், குடியிருப்புப் பகுதியில் அருகருகே உள்ள வீடுகள் கூட கண்களுக்கு புலப்படாத வண்ணம் இருந்தது. மேலும், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, விராலிமலை, ராமேசுவரம் செல்லும் புறவழிச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் பனிமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஊா்ந்து சென்றன.