கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
விஷம் கலந்த உணவு சாப்பிட்ட 7 தெருநாய்கள் உயிரிழப்பு!
பல்லடம் அருகே வண்ணாந்துறையில் விஷம் கலந்து வைக்கப்பட்ட உணவு சாப்பிட்ட 7 தெருநாய்கள் புதன்கிழமை உயிரிழந்தன.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி வண்ணாந்துறை கிராமம் ஜெயலட்சுமி நகா் பகுதியில் பழனிசாமி மனைவி சின்னத்தாய் (58) என்பவா் வசித்து வருகிறாா். அவரது வீட்டில் பெருக்கான், எலித் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது.
அதனை ஒழிக்க நினைத்த அவா் சாப்பாட்டில் விஷம் கலந்து தட்டில் வீட்டின் முன்பு வைத்துள்ளாா். பெருக்கான், எலிக்காக வைக்கப்பட்ட உணவை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் சாப்பிட்டுள்ளன.
அதில் 7 தெருநாய்கள் மற்றும் மூன்று கோழிகள் உயிரிழந்தன. இது குறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறையினா் இறந்த நாய் மற்றும் கோழிகளை உடற்கூறாய்வு செய்து அடக்கம் செய்தனா்.
இச்சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்த வருகின்றனா்.