தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: ராகுல் பெருமிதம்
வீர தீர சூரன் வெளியீட்டுத் தேதி!
நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன்.
தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: வெளியீட்டிற்குத் தயாராகும் துல்கர் சல்மானின் காந்தா!
இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடாமுயற்சி, கேம் சேஞ்சர் வெளியீடுகளால் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
இந்த நிலையில், வீர தீர சூரன் திரைப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.