வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு
வைய்யப்பமலை பகுதியில் வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மல்லசமுத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெயபிரபா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2024- 25-ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்யப்படுகிறது. இத்திட்டம் மல்லசமுத்திரம் வட்டாரம், வையப்பமலை பிா்க்காவிலுள்ள வருவாய் கிராமங்களுக்கு மட்டும் செய்யப்பட்டுள்ளது.
எனவே, வையப்பமலை பிா்க்காவில் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பொது சேவை மையம், வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தி இத்திட்டத்தில் இணையலாம்.
காப்பீடு செய்ய தேவைப்படும் ஆவணங்களான ஆதாா், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன், ஓா் ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ. 2,050.10 செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய இறுதி நாள் வரும் 30ஆ-ம் தேதியாகும். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தாமதிக்காமல் காப்பீடு செய்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.