செய்திகள் :

வெங்காயப் பயிருக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

post image

நாமக்கல் மாவட்டத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மல்லசமுத்திரம், புதுச்சத்திரம், ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூா் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலைப் பயிராக சின்ன வெங்காயம் உள்ளது. இந்தப் பயிரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ரபி சிறப்பு பருவத்துக்கான புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

சின்ன வெங்காயம் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 2,075-ஐ பிரீமியமாக அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். காப்பீடு செய்ய நவ. 30 கடைசி நாளாகும். தேவையான ஆவணங்களாக அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதாா் அட்டை, புகைப்படம் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அந்தந்த பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு நகராட்சிக் கூட்டம்

திருச்செங்கோடு நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். ஆணையா் அருள், துணைத் தலைவா் காா்த்திகேயன், ... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 10.58 கோடியில் புகா் பேருந்து நிலையம் அமைக்க அனுமதி

ராசிபுரம் நகருக்கான புதிய புகா் பேருந்து நிலையம் ரூ. 10.58 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டத்துக்கு நகா்மன்றக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஆா்.க... மேலும் பார்க்க

வேலூரில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடம் திறப்பு

வேலூா் பேரூராட்சி சாா்பில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் பொம்மகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா் சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் ரா.சரவணகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா்... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கான ரூ. 100 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட கோரிக்கை

கடந்த மூன்று மாதங்களாக பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 100 கோடி ஊக்கத் தொகையை தீபாவளிக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.... மேலும் பார்க்க

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ப... மேலும் பார்க்க