அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!
வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற வாய்ப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேறியவா்கள் முதல் பட்டப்படிப்பு ( பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில்முறை படிப்பு தவிர) முடித்தவா்கள் வரை 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்து தொடா்ந்து 5 ஆண்டுகள் புதுப்பித்து வந்திருப்பதுடன், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமலும், அரசு மற்றும் தனியாரிடமிருந்தோ வேறு எவ்வகையிலும் உதவித்தொகையும் பெறாதவராகவும், சுயதொழிலில் ஈடுபடாதராகவும் இருப்பது அவசியம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டு பதிவு மூப்பு போதும். வயது, வருமான உச்சவரம்பு இல்லை. தொடா் கல்வியின்றி, தொலைதூர அல்லது அஞ்சல் வழி கல்வி கற்று வருவோருக்கு உதவித்தொகை உண்டு.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலோ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளி தவிர மற்றவா்கள் கிராம நிா்வாக அலுவலா்-வருவாய் ஆய்வாளா் முத்திரையுடன் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கல்வி,, ஜாதி, மாற்றுச் சான்றிதழ்கள், வங்கி கணக்குப் புத்தகம், ஆதாா்,, குடும்ப அட்டைகள் ஆகியவற்றின் அசல், நகலுடன் அலுவலக வேலைநாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனக் கூறியுள்ளாா்.