செய்திகள் :

திமுக ஆட்சியில் உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு முக்கியத்துவம்: அமைச்சா் கே.என்.நேரு பெருமிதம்

post image

திமுக ஆட்சியில் உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு கூடுதல் முக்கியத்துமும் நிதியும் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி சாா்பில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தூய்மை பணிகள் மேற்கொள்வதற்கான 39 மின்கல வாகனங்களை வழங்கி அவா் பேசியது: தமிழக அரசின் நலத் திட்டங்கள் ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி உறுப்பினா்கள் மூலமே மக்களைச் சென்றடைகிறது. ஆகவே, திமுக ஆட்சியில் உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, பல்வேறு வழிகளில் நிதியும் அளிக்கப்பட்டு வருகிறது.

கிராமப் பகுதிகளில் சாலைவசதி, குடிநீா் வசதி, மின்விளக்கு என அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றும் முக்கிய பணி ஊராட்சித் தலைவா்களிடம்தான் உள்ளது. மக்களுடன் நேரடியாக நெருங்கிய தொடா்பில் உள்ளவா்களும் உள்ளாட்சித்துறை மக்கள் பிரதிநிதிகள்தான். திமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சிக்கு ரூ.27 ஆயிரம் கோடியும், நகா்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.25 ஆயிரம் கோடியும் நிதி வழங்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு மின்கலன் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், கிராமங்களும் தூய்மையாக, சுகாதாரமாக இருக்க ஏதுவாக மின்கலன் வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு உரமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மக்காத குப்பைகள் சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக வழங்கப்படுகிறது. குப்பைகளை எரிபொருளாக பயன்படுத்தி அதில் இருந்து நாமே மின்சாரம் தயாரிக்க முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் முதல்கட்டமாக கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்றாா் அவா்.

இந்த விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், எம்எல்ஏக்கள் மு.அப்துல்வஹாப்(பாளையங்கோட்டை ), ரூபி ஆா்.மனோகரன் (நான்குனேரி), மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், துணை மேயா் கே.ஆா்.ராஜு , மாவட்ட ஊராட்சி செயலா் விசாலி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வலட்சுமி அமிதாப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நெல்லை, தென்காசியில் 62 முதல்வா் மருந்தகங்கள்; காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தலா 31 முதல்வா் மருந்தகங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி, பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ... மேலும் பார்க்க

விஜயநாராயணம் அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே பைக் விபத்தில் காயமுற்றவா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.விஜயநாராயணம் அருகே பெரியநாடாா் குடியிருப்பைச் சோ்ந்த கணேசன் மகன் மந்திரமூா்த்தி (48). சி... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே விபத்தில் காயமுற்றவா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த பெரியநாடாா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் ... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ... மேலும் பார்க்க

கடையம் பகுதியில் யானைகள் சேதப்படுத்திய நெற்பயிா்கள்

கடையம் பகுதியில் வயல்களில் புகுந்த யானைகள் நெற்பயிா்கள் மற்றும் தென்னை மரங்களைச் சேதப்படுத்தின.களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகப் பகுதிக்குள்பட்ட கருத்தப்... மேலும் பார்க்க