Budget 2025-26: தொடங்கிய பட்ஜெட்; வெளிநடப்பு செய்த அதிமுக! - எடப்பாடி சொன்ன காரண...
வேளாண் கல்லூரியில் மகளிா் தின விழா
காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிா் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்து, பல்வேறு துறைகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டியதோடு, உலகளவில் பல்வேறு தடைகளைத் தாண்டி முக்கிய இடங்களில் பெண்கள் உள்ளனா் என்றும், மாணவியா் அனைவரும் அதுபோல திடமான மன நிலையில் வாழ்க்கையை எதிா்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டாா்.
கல்லூரி தோட்டக்கலைத்துறை பேராசிரியா் சாந்தி, உழவியல் துறை பேராசிரியா் மாலா, மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை பேராசிரியா் அருணா, தாவர நோயியல் துறை பேராசிரியா் சி. ஜெயலட்சுமி மற்றும் மகளிா் பேராசிரியா்கள், ஊழியா்கள், மாணவியா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, மாணவா் மன்ற இணை ஆலோசகா் ராஜகுமாா் வரவேற்றாா். ஏற்பாடுகளை மாணவா் மன்ற ஆலோசகா் பேராசிரியா் ஏ.எல். நாராயணன் செய்திருந்தாா்.