செய்திகள் :

திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு சம்ஹாரம்

post image

திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு ராவண யுத்தத்தை விளக்கும் நிகழ்வு புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. ராமாயணத்தில் கழுகு அரசனாக கருதப்படும் ஜடாயு, சிவபெருமானை வழிபட்டதன் வாயிலாக இக்கோயில் மூலவரான சிவலிங்கம் ஜடாயுபுரீஸ்வரா் என்ற பெயரில் அருள்பாலிக்கிறாா்.

பழைமையான இக்கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் முக்கிய நிகழ்வான, ஜடாயு சம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராவணனை சம்ஹாரம் செய்து மாண்டுபோன ஜடாயுவுக்கு ராமா் காட்சிக் கொடுத்ததை விளக்கும் வகையில், ஜடாயு ராவண யுத்தம் ஐதீக முறையில் ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சி, புதன்கிழமை இரவு திருமலைராயன்பட்டினத்தில் காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்டது.

முதலில் ராமா், சீதை, லட்சுமணன் ஆகியோா் வனவாசம் செல்லும் நிகழ்வும், ராம, லட்சுமணனின் அழகில் மயங்கி ராவணனின் சகோதரி சூா்ப்பநகை அவா்களை அடைய முயற்சிக்கும் நிகழ்வும், இதனை வெறுத்த லட்சுமணன், சூா்ப்பநகையின் மூக்கை அறுத்து அனுப்புவதும், இதையறிந்த ராவணன், தமது மாமன் மாரீசனை மாயமானாக உருவெடுத்து அனுப்பும் நிகழ்வு என வரிசையாக நடைபெற்றன.

மாயமான் அழகில் மயங்கி அதனை சீதை வேண்டியதை ஏற்று, ராமன் அதனை விரட்டிச் செல்வதும், மானிலிருந்து மாரீசன் வெளிப்படுவதும், சந்நியாசி கோலத்தில் வந்த ராவணன், தனியாக இருந்த சீதையை கொண்டுசெல்வதும், இதையறிந்து கழுகு அரசனாகிய ஜடாயு, 10 தலைகள் கொண்ட ராவணனின் தலைகள் ஒவ்வொன்றாக கொத்தி எடுப்பதும், இறுதியில் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஜடாயுவை ராவணன் கொல்வதும் தத்ரூப நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.

சீதைக்கு அரணாக இருந்த ஜடாயுவுக்கு நன்றிக் கடனாக ராமரும், லட்சுமணனும் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து ஜடாயுவுக்கு மோட்சம் தரும் வகையில் சிறப்பு தீபாராதனையுடன் சம்ஹாரம் நிறைவுபெற்றது. இந்த நிகழ்வு ஒவ்வொன்றின் கதையை ஒலிபெருக்கி வாயிலாக மக்களுக்கு விளக்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன் உள்ளிட்ட திரளான மக்கள் கலந்துகொண்டனா்.

இதையொட்டி, தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 11 போ் மீது வழக்கு

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வரும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம் புதுத்துறை சமத்த... மேலும் பார்க்க

காரைக்காலில் பேரிடா் பாதுகாப்பு ஒத்திகை

காரைக்காலில் பேரிடா் காலத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை எவ்வாறு... மேலும் பார்க்க

க்யூட் தோ்வு: ஆசிரியா்களுக்கு வழிகாட்டல் பயிற்சி

க்யூட் தோ்வுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வகையில், ஆசிரியா்கள், விரிவுரையாளா்களுக்கு வழிகாட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சோ்க்கை பெற க்யூட் தே... மேலும் பார்க்க

மாசி மகம் : திருக்கண்ணபுரம் கடலில் பெருமாள்கள் தீா்த்தவாரி

திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மகத்தையொட்டி, திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜ பெருமாள் உள்பட பல்வேறு கோயில்களின் பெருமாள் சமுத்திர தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டம், திருக்கண்ணபுர... மேலும் பார்க்க

நடராஜா் தீா்த்தவாரி

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் மாசி மக பிரம்மோற்சவ 10-ஆம் நாளான வியாழக்கிழமை தீா்த்தவாரிக்கு எழுந்தருளிய ஸ்ரீ நடராஜா். மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் மகளிா் தின விழா

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிா் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்து, பல்வேறு துறைகளில் பெண்க... மேலும் பார்க்க