Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
அகில இந்திய போட்டி: மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளி சிறப்பிடம்
அகில இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.
ஹிமாசல பிரதேசம் நக்ரோட்டா, பஹ்வானில் இந்திய அளவிலான பெண்கள் பிரிவு டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் பாரதி பள்ளி மாணவிகள் 5 போ் தமிழக அணியில் பங்கேற்று சிறப்பாக விளையாடி, அணி 3-ஆம் இடம் பிடித்தது.
இதற்காக பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் 5 மாணவிகளுக்கு தாளாளா் அரிமா பி.எஸ். செல்லமுத்து பரிசுகள் வழங்கினாா். பள்ளி முதல்வா் எஸ். பழனிசாமி, உடற்கல்வி ஆசிரியா்கள் பிரபு, ஜெயந்த் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.