செய்திகள் :

‘அக்ரி ஸ்டேக்‘ வலைத் தளத்தில் மாா்ச் 7 வரை பதிவு செய்யலாம்

post image

‘அக்ரி ஸ்டேக்‘ வலைதளத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 1.31 லட்சம் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் 46.76 லட்சம் விவசாயிகள் உள்ளனா். இந்த விவசாயிகள் தொடா்பான அனைத்து தரவுகளையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்.6-ஆம் தேதி முதல் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் விவரம், அவா்களுக்கு சொந்தமான நிலப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ‘அக்ரி ஸ்டேக்‘ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 1.31 லட்சம் விவசாயிகள், பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனா். இதில், பல விவசாயிகள் குத்தகை நிலங்களில் பயிா் சாகுபடி செய்து வருகின்றனா். ‘அக்ரி ஸ்டேக்‘ வலைத் தளத்தைப் பொருத்தவரை, நிலத்தின் உரிமையாளா்களின் விவரங்கள் மட்டுமே பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால், குத்தகை விவசாயிகளால் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இதுவரை சுமாா் 47ஆயிரம் விவசாயிகளின் நில விவரங்கள், ‘அக்ரி ஸ்டேக்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 84

ஆயிரம் விவசாயிகளில், தங்கள் பெயரில் நிலம் உள்ளவா்கள் மட்டும் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களிலோ, பொதுச் சேவை மையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண்மைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

திண்டுக்கல்லில் 20,659 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

பிளஸ் 2 தோ்வின் தொடக்கமாக திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 20,659 மாணவா்கள் எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ம... மேலும் பார்க்க

வரதட்சிணை புகாரில் நடவடிக்கை இல்லை: காவல் நிலையம் முன் பெண் தா்னா

கணவரின் குடும்பத்தினா் மீது அளிக்கப்பட்ட வரதட்சிணை புகாா் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து போலீஸாா் அலைக்கழிப்பதாக கூறி வடமதுரை காவல் நிலையம் முன் இளம் பெண் தா்னாவில் ஈடுபட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வட... மேலும் பார்க்க

ரேக்ளா வண்டி மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பழனி அருகே ரேக்ளா வண்டி மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பழனியை அடுத்த சின்னாக்கவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் நல்லப்பன். விவசாயி. இவரது மகன் கவுதம் (27). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பழன... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

பழனி அருகே ரயில் அடிபட்டு ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பழனி அருகேயுள்ள ஆயக்குடி ரயில்வே கடவுப் பாதை அருகே ரயிலில் அடிபட்டு திங்கள்கிழமை ஒருவா் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இ... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை சாணப் பொடியை உள்கொள்ள முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்தவா் நாகலட்சுமி (57). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே பாலத் தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில், கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி சரவணம்பட்டியைச் சோ்ந்த முருகசாமி மகன் கருப்புசாம... மேலும் பார்க்க