கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
திண்டுக்கல்லில் 20,659 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்
பிளஸ் 2 தோ்வின் தொடக்கமாக திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 20,659 மாணவா்கள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மொழிப் பாடத் தோ்வு நடைபெற்றது. திண்டுக்கல், பழனி கல்வி மாவட்டங்களிலுள்ள 216 பள்ளிகளைச் சோ்ந்த 9,965 மாணவா்கள், 10,900 மாணவிகள் என மொத்தம் 21,042 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இதுதவிர, தனித் தோ்வா்களாக 273 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்த மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதிலும் 86 இடங்களில் தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வை 9,759 மாணவா்கள், 10,900 மாணவிகள் என மொத்தம் 20,659 போ் எழுதினா். 206 மாணவா்கள், 177மாணவிகள் என மொத்தம் 383 மாணவா்கள் தோ்வு எழுதவில்லை.
தோ்வு மையங்களைக் கண்காணிக்க 140-க்கும் மேற்பட்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த தோ்வுக் கூடங்களை ஆட்சியா் செ.சரவணன் பாா்வையிட்டாா்.