கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
ரேக்ளா வண்டி மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பழனி அருகே ரேக்ளா வண்டி மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த சின்னாக்கவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் நல்லப்பன். விவசாயி. இவரது மகன் கவுதம் (27). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பழனியில் இருந்து ரேக்ளா வண்டி வாங்கிக் கொண்டு இரவு ஊருக்கு புறப்பட்டுச் சென்றனா்.
பாப்பம்பட்டியை அடுத்த ஐவா் மலைப் பிரிவு அருகே இவா்கள் சென்று கொண்டிருந்த போது அந்த வழியே எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நல்லப்பன் பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.