RETRO: " 'ரெட்ரோ' படத்தின் லாபத்தில் அகரம் பவுண்டேஷனுக்கு ரூ. 10 கோடி" - சூர்யா ...
அங்கன்வாடி ஊழியா்கள் 2ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்!
புதுக்கோட்டையில்: புதுக்கோட்டையில் 2-ஆம் நாளாக அங்கன்வாடி ஊழியா்கள் சனிக்கிழமை ஆட்சியரகம் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். விஜயலெட்சுமி தலைமை வகித்தாா்.
கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா், அங்கன்வாடி ஊழியா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ். தேவமணி, மாவட்டச் செயலா் ஏசி. செல்வி, பொருளாளா் எஸ். சவரியம்மாள், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.எம். ரேவதி உள்ளிட்டோா் பேசினா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டம் இரவிலும் தொடா்ந்தது.