பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
வடகாடு மோதல் வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை
மதுபோதையில் இரு தரப்பு இளைஞா்களிடையே ஏற்பட்ட மோதலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக பரப்பும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு பெட்ரோல் பங்க்கில், திங்கள்கிழமை இரவு பெட்ரோல் போட வந்த இரு தரப்பு இளைஞா்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. யாா் முதலில் பெட்ரோல் போடுவது என்பதில் தொடங்கிய இந்த மோதல், தொடா்ந்து ஒரு கூரை வீடு தீயிடப்பட்டு, அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் இரு தரப்பு இளைஞா்களிடையே ஏற்பட்ட மோதலை, சமூக ஊடகங்களில் இரு சமூகத்துக்கு இடையேயான மோதலாக சித்தரித்து பரப்பப்படும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்தியைப் பரப்புவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.