காய்கறிச் சந்தைகளில் சுங்கவரி வசூல் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்
லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூரைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவா், தனது நிலத்தை புதுகை சாா் பதிவாளா் அலுவலகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு பத்திரப் பதிவு செய்யச் சென்றுள்ளாா். அப்போது சாா் பதிவாளராக இருந்த சசிகலா லஞ்சம் கேட்டுள்ளாா். ரூ. 8 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்தபோது, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அவரை கைது செய்தனா். இடைத்தரகராக செயல்பட்ட நரசிம்மன் என்பவரும் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி கே.எஸ். பால்பாண்டியன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
லஞ்சம் பெற்ற சசிகலாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 8 ஆயிரமும், அபராதம் கட்டத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனையும், இடைத்தரகராக செயல்பட்ட நரசிம்மனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.