விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு
அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகையில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்ட மாநாடு, மாவட்டத் தலைவா் செல்வராணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அங்கன்வாடி திட்டங்களுக்கு வழங்கும் நிதியை குறைக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்க வேண்டும்; அங்கன்வாடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் திரளானோா், நாகை அவுரித் திடலில் இருந்து பேரணியாக புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதில், மாநில பொதுச் செயலா் டெய்சி, துணைத் தலைவா் பாலசரஸ்வதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.