தர்பூசணியில் ரசாயன விவகாரம்: உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம்
புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி பிரமோற்சவத் திருவிழா ஏப்.2- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.
இதையடுத்து, முக்கிய வீதிகளின் வழியாக தோ் வலம் வந்தது.
இதில், பிரகாஷ்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
சனிக்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.