செய்திகள் :

'அசாம் டு திருச்செந்தூர்' - கோயில் யானை தெய்வானையின் பின்கதை!

post image

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். 

இக்கோயிலில் 25 வயதான ”தெய்வானை” என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. அன்னதான மண்டபம் அருகிலுள்ள யானை கட்டிப் போடும் கூடத்தில் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருக்கோயில் நிர்வாக நிதி மட்டுமின்றி, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள யானை பராமரிப்பு உண்டியல்கள் மூலம் கிடைக்கப் பெறும் பக்தர்களின் காணிக்கை மூலமும் தெய்வானை யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.  

யானை தாக்கியதில் உயிரிழந்த இருவர்

தினமும் காலை, மாலை வேளைகளில் தெய்வானை யானை கோயில் வெளிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். அதேபோல முக்கிய விசேஷ நாள்களிலும், விரத நாள்களிலும் ரத வீதிகளில் சுற்றி வருவது வழக்கம். திருக்கோயில் அருகிலுள்ள சரவணப் பொய்கையில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் ஷவர் வசதியுடன் கூடிய பிரம்மாண்ட நீச்சல் குளமும் தெய்வானை யானைக்காகக் கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டது.

இந்த நீச்சல் குளத்தில்தான் தினமும் தெய்வானை உற்சாக குளியல் போட்டு அலங்கரிக்கப்பட்டு கோயிலுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம். தெய்வானை யானை, தோல் நோயால் பாதிப்படைந்திருந்தது. துதிக்கை, கால்கள், முதுகு, வால் ஆகிய பகுதிகளில் மரு மற்றும் பூஞ்சைகள் சூழ்ந்துள்ளன. இதனால் தெய்வானை கடந்த சில மாதங்களாகச் சோர்வாகவே காணப்படுகிறது. “யானைக்குப் பக்தர்கள் வழங்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் மூலம்கூட இது மாதிரியான தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதில், கெட்டுப் போன உணவுப் பொருள்களினால் ஒவ்வாமை ஏற்படும். இதனால் யானையின் உணவுப் பழக்கம் இயற்கைக்கு எதிரானதாக மாறி விடுகிறது.

நீச்சல் குளத்தில் உற்சாக குளியலில் தெய்வானை யானை

எனவே இனிவரும் காலங்களில் பக்தர்கள் கோயில் யானைக்கு நேரடியாகப் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும்” என, தெய்வானையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் திருக்கோயில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தினர். இதனையடுத்து, “பக்தர்கள் யானைக்கு உணவாகக் கொடுக்க விரும்பும் பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனித்தனிப் பெட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.

யானைப் பாகர்கள், அந்த உணவுப் பொருள்களின் நிலையை ஆய்வு செய்து அதில் சுத்தமாக இருப்பதை யானைக்கு வழங்குவார்கள்.” எனத் திருக்கோயில் தக்கார் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் கூறினார்.  

இந்த நிலையில் இன்று (நவம்பர் 18) மதியம் சுமார் 3 மணி அளவில் யானை உதவி பாகர் உதயகுமார், யானை தெய்வானைக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே உதயகுமாரின் உறவினரான நாகர்கோவிலைச் சேர்ந்த சிசுபாலன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது தெய்வானை யானை இருவரையும் தாக்கியுள்ளது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

யானை தாக்கியதில் உயிரிழந்த இருவர்

இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸார் மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த தெய்வானை யானை என விசாரித்தோம்.

“தெய்வானை என்கிற இந்த யானையின் முதல் பெயர் ’பிரிரோனா’ என்பதாகும். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லீலாபோரா என்பவருக்குச் சொந்தமானது. அந்த யானயை திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், திருச்செந்தூர் கோயிலின் அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த தேவதாச சுந்தரம் விலை கொடுத்து வாங்கி, கோயிலுக்கு வழங்கியுள்ளார்.

அப்போதுதான் ’பிரிரோனா’ என்கிற பெயர், ’தெய்வானை’ என மாற்றம் செய்யப்பட்டது. அப்போது தெய்வானைக்கு 6 வயது. அதேநாளில், குமரன் என்கிற 3 வயது ஆண் யானையையும் தேவதாச சுந்தரம் இக்கோவிலுக்கு வாங்கி வழங்கினார். திருச்செந்தூரில் இருந்த தெய்வானை என்கிற இந்த யானை, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான், உதவி பாகராக காவடி காளிதாஸைக் கொன்றது.  

தெய்வானை யானை

மிகுந்த மன அழுத்தத்திலிருந்த இந்த யானையை திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்தபோது சரண் என்பரை தூக்கி வீசித் தாக்கியது. தொடர்ந்து இது போன்ற சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்ததால், பாகர்கள் இந்த யானையைக் கையாள பெரும் முயற்சி எடுக்க வேண்டி இருந்தது. அதனால், மீண்டும் அசாமிற்கே திரும்ப அனுப்பி வைத்துவிடும்படி அசாம் மாநில அரசு கேட்டது.

”முறையாகப் பராமரிக்கப்படும்” என, தமிழக அறங்காவல்துறையின் உத்தரவாதத்தின் பேரில் தெய்வானை தமிழகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானையுடன் வழங்கப்பட்ட ஆண் யானையான குமரன், யானைகள் முகாமிற்குச் சென்ற போது அங்குக் காட்டு யானைகள் தாக்கியதில் காயமடைந்து திரும்பியது. அதன் பிறகு நோய்வாய்ப்பட்டு இறந்து போனது.” என்றனர். 

தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்தது தொடர்பாகத் திருக்கோயில் தக்கார் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகனிடம் பேசினோம், “கால்நடை மருத்துவர்கள் தெய்வானையை முதல்கட்டமாகப் பரிசோதித்ததில் யானை, மன அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது என்கிறார்கள்.

யானை பராமரிப்புக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ள தெய்வானை

யானைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு முகாமிற்குத் தெய்வானையை அனுப்பி வைக்கலாம் என வனத்துறையினர் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும், இருவரையும் யானை எப்படி, எதனால் தாக்கியது என யானைக்கூடத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்மந்தப்பட்ட துறையின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துச் சொல்ல முடியும்” என்றார்.  

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருமண வரமளிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம் - பெங்களூரு ஸ்ரீகைலாச வைகுந்த க்ஷேத்ரத்தில்!

திருமண வரமளிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம்! பெங்களூரு ஸ்ரீகைலாச வைகுந்த க்ஷேத்ரத்தில் 7-12-2024 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு வேண்டிய வரனும் சிறப்பான இல்லறமும் அமைத... மேலும் பார்க்க

கார்த்திகை முதல் நாள் காவிரி நீராடலுக்கு இவ்வளவு சிறப்புகளா?கஷ்டங்கள் நீக்கும் துலா ஸ்நான மகிமைகள்

முடவன் முழுக்கு: கங்கையைப் போன்றே மயூரத்துக் காவிரியின் கரையில் செய்யப்பெறும் தவம், தானம், நீத்தார் கடன் முதலான புண்ணிய காரியங்களுக்கும் பலமடங்கு புண்ணிய பலன்கள் உண்டு. 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா' ... மேலும் பார்க்க

திருமூலர் குருபூஜை: `வாழ்வில் பெரும் திருப்பங்கள் உண்டாக' - தினமும் தியானித்து வழிபட வேண்டியவர்

'ஐப்பசி-அசுவதி' - 14.11.2024 திருமூலர் குருபூஜை தினம்! தியானம் பயில்பவர்களுக்கும்: குருவருளை விழைபவர்களுக்கும் ஏற்றதோர் அருமையான சிவபூமி இது. இன்றளவும் அசுவினி நட்சத்திரத்தை உடையவர்கள் அந்நட்சத்திர நா... மேலும் பார்க்க

`எல்லாம் அந்த ரங்கன் செயல்னுதான் சொல்லணும்' - இந்திரா சௌந்தர்ராஜனின் இறுதி வார்த்தைகள்

எழுத்துலக ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திருவரங்கனின் திருவடியில் கலந்துவிட்டார்.சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைக்கதைகள் என இவரின் படைப்புகள் காலத்தால் அழியாத... மேலும் பார்க்க

`திமுக அரசு ஆன்மிக அரசு' - பெரிய கோயில் சதய விழாவில் தருமபுரம் ஆதீனம் புகழாரம்!

மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் சதய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடுகிறது. இவ்விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த 2022-ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ராஜராஜ சோழனின் 1039-வது சத... மேலும் பார்க்க