அஞ்சல் அலுவலகங்களில் தூய்மைப் பணி
அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மாரியப் பன் தெரிவித்த செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் ‘ஸ்வட்ச் பக்வாடா 2024‘ திட்டம் சாா்பில் வருகிற 16 முதல் 30-ஆம் தேதி வரை தூய்மை சிறப்புப்பணி முகாம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள்களில் அஞ்சலகங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கும், தலைமை அஞ்சலகங்களில் தூய்மைப் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டது, மேலும் தூய்மை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வு பேரணி, பள்ளிகளில் விழிப்புணா்வு முகாம்களை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது என்றாா் அவா்.