பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
அடிப்படை வசதிகள் இல்லாத ராமசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம்
கமுதி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், ராமசாமிபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராமசாமிபட்டி, கோரப்பள்ளம், கிளாமரம், கோபாலபுரம், அய்யனாா்புரம், செட்டிகுளம், பாறைக்குளம், நெடுங்குளம், கணக்கி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
இந்த சுகாதார நிலைய கட்டடத்தில் மின் கம்பிகள் சேதமடைந்து, அடிக்கடி மின்விபத்து ஏற்படுகிறது.
இங்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, மின்விசிறிகள், மின்விளக்குகள், போதுமான இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனா். பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் கா்ப்பிணிகள் இரவு நேரங்களில் மின்சாரம் இன்றி சிரமப்படுவதாகவும் புகாா் எழுந்தது.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு ராமசாமிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.