செய்திகள் :

அடுக்குமாடியில் வெடித்த சிலிண்டர்; முன்னாள் காதலன் உதவியால் நடந்த கொலை - என்ன நடந்தது?

post image

டெல்லி திமர்பூர் பகுதியில் இம்மாத மத்தியில் அடுக்கு மாடி குடியிருப்பில் ராம்கேஷ் மீனா (32) என்பவர் தீப்பிடித்து எரிந்து கிடந்தார். அவர் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு இறந்ததாக ஆரம்பத்தில் போலீஸார் நம்பினர். ஆனால் விசாரணையில் மீனா கொலை செய்யப்பட்டிருப்பது சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரிய வந்தது. மீனாவுடன் `லிவ் இன்' ரிலேசன்ஷிப்பிலிருந்த அம்ரிதா(21), அவரின் முன்னாள் காதலன் ஸ்மித் மற்றும் மேலும் ஒருவருடன் சேர்ந்து கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் முதலில் மீனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் அவரது உடல் மீது ஆயில், நெய் ஊற்றி தீவைத்துள்ளனர். அதோடு காஸ் சிலிண்டரையும் திறந்துவிட்டதால் வீடு தீப்பிடித்து சிலிண்டர் வெடித்துவிட்டது. கைது செய்யப்பட்ட அம்ரிதாவிடம் விசாரணை நடத்தியதில் மீனா எடுத்த அம்ரிதாவின் வீடியோவை டெலிட் செய்ய மறுத்து அதனைக் காட்டி மிரட்டி வந்ததால் இக்கொலையை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,'' மீனாவும், அம்ரிதாவும் கடந்த மே மாதம் நொய்டாவில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூவிற்காக சென்றுள்ளனர். அங்கு அவர்களிடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

மீனா, அம்ரிதா
மீனா, அம்ரிதா

அந்த அறிமுகத்தால் அவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு காபி ஷாப்பிற்கு சென்று காபி குடித்துவிட்டு போன் நம்பரையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு இருவரும் அடிக்கடி போனில் தொடர்பில் இருந்துள்ளனர். அத்தொடர்பு அவர்களுக்குள் காதலை வரவைத்தது. இதனால் இருவரும் டெல்லியில் வாடகை வீட்டில் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். அவர்கள் தனிமையில் இருந்தபோது இருவரும் சேர்ந்தே வீடியோ எடுத்துக்கொண்டனர்.

ஆனால் அம்ரிதாவின் வாழ்க்கையில் அவரின் முன்னாள் காதலன் சுமித் நுழைய ஆரம்பித்தார். அம்ரிதா மொரதாபாத்தில் இருந்தபோது இருவரும் காதலித்தனர். அம்ரிதா டெல்லி வந்தபிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால் கடந்த செப்டம்பரில் இருவரும் மீண்டும் சேர்ந்தனர். அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்ததால் அம்ரிதா மீனாவை விட்டுவிலக ஆரம்பித்தார்.

இதனால் மீனா தனிமையை உணர்ந்தார். மற்றொரு புறம் அம்ரிதா சமூக வலைதளப் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டுவந்திருக்கிறார். அதில் சுமித்தும் இருந்திருக்கிறார். அம்ரிதாவுடன் மீனா தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து இருவரும் தனிமையிலிருந்த வீடியோக்களை அம்ரிதாவிற்கு அனுப்பி மீனா மிரட்ட ஆரம்பித்தார். உடனே கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அம்ரிதாவும் எச்சரித்துள்ளார்.
அதோடு வீடியோக்களை டெலிட் செய்ய தன்னிடம் ஹார்டு டிஸ்க்கை கொடுக்கும்படி மீனாவிடம் அம்ரிதா கேட்டார். ஆனால் மீனா கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நேரத்தில் அம்ரிதா தன் பழைய காதலன் சுமித்துடன் சேர்ந்து வேறு ஒரு வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினார். அவர்கள் இருவரும் சேர்ந்து மீனாவின் மிரட்டல் குறித்து ஆலோசித்தனர்.

Representational Image
Representational Image

இறுதியில் மீனாவின் வீட்டிற்குள் சென்று ஹார்டு டிஸ்க்கை திருட திட்டம் தீட்டினர். இதற்காக அம்ரிதா முதலிலேயே மீனாவின் வீட்டிற்கு சென்றார். அவர் மீனாவுடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு, அவரது கை, கால்களை கட்டி வாயில் துணியை திணித்தாரா என்று தெரியவில்லை.

ஆனால் நள்ளிரவில் சுமித்தும் அவரின் நண்பரும் ஹார்ட் டிஸ்க்கை எடுக்கும் நோக்கத்தில் வீட்டிற்குள் நுழைந்தனர். ஆனால் நள்ளிரவு சண்டையில் மீனா இறந்து போனார். இதையடுத்து இதனை விபத்து போன்று காட்ட முடிவு செய்து நெய், ஆயில் ஊற்றி சிலிண்டரைத் திறந்து விட்டு தீ வைத்துள்ளனர். இதில் மீனா முற்றிலும் எரிந்து போனார் என்று தெரிவித்தார். கைதான மூன்று பேரும் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க