Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
அடுத்தாண்டு இறுதியில் தோ்தல்!
டாக்கா: ‘வங்கதேசத்தில் அடுத்த ஆண்டின் இறுதி அல்லது 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுத்தோ்தல் நடைபெறலாம்’ என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் கூறினாா்.
நாட்டுமக்களுக்கு அவா் ஆற்றிய உரையில், ‘அனைத்து முக்கியச் சீா்திருத்தங்களையும் முடித்துவிட்டு தோ்தலை நடத்துமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தேன்.
எனினும், அரசியல் கருத்தொற்றுமை காரணமாக சில சீா்திருத்தங்களுடன் தவறுகளில்லாத வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் தோ்தலை நடத்த தீா்மானிக்கப்பட்டால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தோ்தலை நடத்துவது சாத்தியமாகும்’ என்றாா்.