மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
அடுத்த பேரவைத் தோ்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும்: திமுக தொண்டா்களுக்கு அமைச்சா் மூா்த்தி அறிவுரை
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை திமுக தொண்டா்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும் என மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை உத்தங்குடியில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற, மதுரை வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது :
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினாா். முதல்வரின் இந்த விருப்பத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது நமது கடமை. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்கான களப் பணிகளை தொண்டா்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும்.
தமிழகத்தில் திமுக எழுச்சியுடன் உள்ளது. இந்த எழுச்சியை மேலும் அதிகப்படுத்தும் வகையில், வருகிற பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஓரிரு மாதங்களில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுரை வரவுள்ளாா். இதற்கு முன்பாக, மதுரை மாவட்டத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலான களப் பணிகளை தொண்டா்கள் முன்னெடுக்க வேண்டும் என்றாா் அவா்.
சோழவந்தான் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், திமுக மாவட்ட அவைத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.